Gavitha / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் வரிய மாணவர்கள் 134 பேருக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் இன்று (08) வழங்கப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் ரீ. வசந்தராஜா தெரிவித்தார்.
பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொல்லன் உல்லை விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 84 வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் பாடசாலைப் பிரதி அதிபர் என். நேசகஜேந்திரனிடம் கையளிக்கப்பட்டன.
இதேவேளை, மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்வி அபிவிருத்திக் கழகத்தில் இலவசமாக பிரத்தியேக வகுப்புக்களைத் தொடரும் 50 வறிய மாணவர்களுக்கும் இலவச அப்பியாசக் கொப்பிகள் கல்வி அபிவிருத்திக் கழகத்தின் தலைவர் எஸ். குலேந்திரனிடம் கையளிக்கப்பட்டன.

30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025