2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலை மாணவி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரியினுடைய மூன்றாம் வருட மாணவி ஒருவர் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கட்கிழமை (9) காலை  உயிரிழந்துள்ளதாக அப்பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, யோகபுரத்தைச் சேர்ந்த சி.வாமிலா (வயது 24)என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி பயின்றுவந்த இந்த மாணவி,  இரு தினங்களுக்கு முன்னர் வயற்றுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த மாணவியின் மரணம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X