2021 மே 08, சனிக்கிழமை

இல்ல விளையாட்டு போட்டி

Gavitha   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா   


மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில், பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட பின்னர், தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றி தேசிய கீதம்  இசைக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து ஒலிம்பிக் சுடரேற்றி மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் விளையாட்டுகள் ஆரம்பமானது. இப்பாடசாலையின் இல்லங்களான வள்ளுவர், விபுலானந்தர், நாவலர் ஆகிய இல்ல மாணவர்களின் விளையாட்டுகள் மிக சிறப்பாக இடம்பெற்றன.


மாணவர்களின் விளையாட்டுகளை தொடர்ந்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களின் விளையாட்டுகளும் வினோத உடை போட்டிகளும் இடம்பெற்றன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.


விளையாட்டு போட்டியில் 275 புள்ளிகளை பெற்று வள்ளுவர் இல்லம் 3ஆம் இடத்தையும் 365 புள்ளிகளை பெற்று விபுலானந்தர் இல்லம் 2ஆம் இடத்தையும் 453 புள்ளிகளை பெற்று நாவலர் இல்லம் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. அவற்றுக்கான வெற்றி கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


2015ஆம் ஆண்டுக்கான பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் நாவலர் இல்லம் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலையில் இல்ல சாம்பியனானது .   


இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன்  மண்முனை வடக்கு கோட்ட கல்வி அதிகாரி எ.சுகுமாரன், உதவிக்கல்வி பணிப்பாளர், வி .லவக்குமார், லயன்ஸ் கழக ஆளுநரின் பிரத்தியோக செயலாளரும் மட்டக்களப்பு கிரிக்கெட் சம்மேளத்தின் தலைவருமான என்.பி. ரஞ்சன், ஆசிரியர் ஆலோசகர் திருமதி அருளம்பலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X