Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சுமார் 270,000 ரூபாய் பெறுமதியான ஆழ்கடல் மீன்பிடி வலைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் நான்கு பேரை புதன்கிழமை (11) காலை கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், மூன்று பேருக்கு 2,700 அடி வலைகளை விற்பனை செய்துள்ளார். இந்த வலைகள் திருட்டு வலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வலையை விற்பனை செய்தவரும் வாங்கிய மூவருமாக சந்தேக நபர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த வலை வியாபாரத்துடன் இன்னும் பலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
1 hours ago