2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் நாளொன்றுக்கு ரூ.42 இலட்சம் மதுபாவனைக்கு செலவு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 27 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 42 இலட்சம்  ரூபாய் மதுபானப் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. இது இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கச் செய்கின்றது என்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்;ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.அருளானந்தம் தெரிவித்தார்.

தேசிய போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு கறுவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்விலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இலங்கையில்  முக்கியமாக அழிவுப்பாதையை ஏற்படுத்துவதாக போதைப்பொருள் பாவனை உள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .