2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் பெறவேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மண்முனைப்பற்று பிரதேச சபைப் பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களும் சமையற்காரர்களும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என்று மண்முனைப்பற்று மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பசீர் தெரிவித்தார்.

ஆரையம்பதி சுகாதார அலுவலகத்தின் ஏற்பாட்டில், மண்முனைப்பற்று பிரதேச சபைப் பிரிவிலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், மண்முனைப்பற்று பிரதேச சபையில்  வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 'சுத்தமான உணவும் தண்ணீருமே நோய் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும்.
மண்முனைப்பற்று பிரதேச சபைப் பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களும் சமையற்காரர்களும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், இவர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் இருந்தால் மாத்திரமே, மண்முனைப்பற்று பிரதேச சபையினால் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கமுடியும்' என்றார்.

'உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில்  கடமையாற்றும் ஊழியர்கள் அடிக்கடி தமது கைகளை கழுவி சுத்தம் செய்வதுடன், போதைவஸ்து பாவனையோ,  புகைத்தலில் ஈடுபடவோ கூடாது. மேலும், பாத்திரங்களையும் தினமும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.   சமைப்பதற்காக ஒரு நாள் பாவித்த எண்ணையை திரும்பவும் பாவிக்கக்கூடாது. இவ்வாறு ஏற்கெனவே பாவித்த எண்ணையை திரும்பவும் பாவிப்பதால் நோய்கள்  ஏற்படுவதற்கு  காரணமாக அமைகின்றது' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .