Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யோ.சேயோன்
நான் சிறிது காலம் பிரதி அமைச்சராக இருந்தபோது பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டேன். ஆனால் தமிழ்த் தேசியப் போராட்டத்தை காட்டிக்கொடுக்கவில்லை. அழிக்கமுற்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்
எஸ். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடியில் சனிக்கிழமை (01) இ;டம்பெற்ற ஜக்கிய தேசியக்கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் உள்ளன். ஆனால் அன்று ஒட்டக்குழுக்களாக செயற்பட்டவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒட்டிக்கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தமிழ்தேசிய வாதிகளா? யார் இந்த வேட்பாளர் துரைரெத்தினம்.
நான் ஒரு கதையை மாத்திரம் கூறுகின்றேன். நான் அன்று பிரதி அமைச்சராக இருந்தபோது கரிகாலனின் சகோதரிக்கு சமுர்த்தி தொழில் வழங்கினேன்.
'ஏன் புலியின் தங்கைக்கு தொழில் வழங்கினாய்? புலிக்குடும்பத்துக்கு தொழில் வழங்கலாமா?' என கொழும்பில் வைத்து துரைரெத்தினம் கேட்டார்.
தங்கை புலி அல்ல அதனால் தொழில் வழங்கினேன் என நான் கூறினேன்.
இப்படிப்பட்ட துரைரெத்தினம் எப்படி தமிழ் தேசிய வாதியாவது. இவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர். இவரின் காட்டிக்கொடுத்த கதைகள் பல உண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சாம்பாறாக மாறிவிட்டது. ஒட்டுண்ணிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு தமிழ் தேசியம் பேச முடியும்.? என அவர் மேலும் தெரிவித்தார்.
5 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago