2021 மார்ச் 04, வியாழக்கிழமை

வீட்டில் திருட்டு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கிக்கட்டுப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 10,000 ரூபாய் பணம், சுமார் 96,900 ரூபாய் பெறுமதியான தங்கநகைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (02) இரவு திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தி மற்றும் தடிகளுடன் வீட்டினுள் புகுந்த இருவர், அவ்வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இருவரின் வாய் மற்றும் கண்களை கட்டிவிட்டு மேற்படி பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரிடம்; வீட்டு உரிமையாளர் நேற்று திங்கட்கிழமை காலை செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுணதீவுப் பொலிஸார், திருட்டில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .