2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சிசு கொலை; இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பிரசவித்த சிசுவை நிலத்தில் அடித்துக் கொலை செய்து புதைத்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அச்சிசுவின் தாய், பெரியதாய் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணொருவர் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு இவர் பரிசோதிக்கப்பட்டபோது சிசுவை பிரசவித்தமை தெரியவந்தது. இது தொடர்பில் விசாரித்தபோது  பிரசவிக்கப்பட்ட சிசு இறந்த நிலையில்   புதைத்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணின் தடுமாற்றத்தில் சந்தேகம் கொண்ட வைத்தியர்கள், இது பற்றி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை கரடியனாறு பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய பொழுது மேற்படி பெண்ணும் அவரது சகோதரியும் சேர்ந்து பிறந்த குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்து புதைத்தமை  தெரியவந்திருக்கின்றது.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .