2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

தொழிற்பேட்டைகள் நிறுவப்படின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

இங்கு வேலை வாய்ப்பு இன்மையால் இளைஞர், யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பலதுறைசார் தொழிற்பேட்டைகள் நிறுவப்படும் பட்சத்தில் இளைஞர், யுவதிகளின் வேலை வாய்ப்பு இன்மைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பழுகாமத்தில் தேர்தல் பிரசாரக் காரியாலயத்தை செவ்வாய்க்கிழமை (11) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர், 'அபிவிருத்தி தனி மனிதனிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதே கிராமம், பிரதேசம், மாவட்டம் தழுவி நாடு அபிவிருத்தி நோக்கிச் செல்லும். இவ்வாறான அபிலாஷைகளையும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் தனி நபர் முதல் நாடு தழுவிய ரீதியில் முன்நோக்கிக் கொண்டு
செல்லக்கூடிய தலைவர்களை எதிர்வரும் பொதுத் தேர்தலின் மூலம் மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்' என்றார்.

'எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலானது மிகவும் முக்கியம் வாய்ந்த தேர்தலாகும்' எனவும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .