2021 மார்ச் 08, திங்கட்கிழமை

யானை தாக்கியதில் வீடு சேதம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று செயலாளர் பிரிவுக்குட்பட்ட  சித்தாண்டி – 4 கிராம அலுவலகர்; பிரிவிலுள்ள உதயன்மூலை கிராமத்தினுள் புதன்கிழமை (19) இரவு புகுந்த காட்டு யானைகள் தாக்கி வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்தக் கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவிலுள்ள வயல்களில் வேளாண்மை அறுவடை முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த பத்து நாட்களாக சித்தாண்டிக் கிராமத்தின் எல்லைப்பகுதிகளிலுள்ள குடியிருப்புகளினுள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களுக்கும் வீடுகளுக்கும் சேதம் விளைவிப்பதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

இரவு வேளைகளில் காட்டு யானைகள் வருவதினால் வீடுகளில் உறங்குவதற்கு கூட அஞ்சுவதாகவும் அவர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .