2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கோடரியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வம்மியடி ஊற்று 40ஆம் கட்டைக் கிராமத்தில் கடந்த ஜுன் மாதம் 12ஆம் திகதி கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில்; கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிவயோகராசா தனுஜன் (வயது 17) என்பவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளானவர் உட்பட இளைஞர்கள் சிலர், விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்துவிட்டு, பலாப்பழமொன்றை வெட்டுவதற்காக அங்கிருந்த அரிவாளை எடுத்து பலாப்பழத்தை வெட்டி உட்கொண்டுள்ளனர்.

தனக்கு தெரியாமல் தனது அரிவாளை எடுத்துப் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த 33 வயதுடைய ஒருவர், காத்திருந்து கடந்த ஜுன் மாதம் 12ஆம் திகதி தனுஜனை வழிமறித்து கோடரியால் தாக்கியுள்ளார்.

இதன் பின்னர் கோடரியுடன் சென்று சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்தார்.

படுகாயமடைந்த தனுஜன்; கண்டி போதனா வைத்தியசாலையில்  73 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .