2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வன்முறை சம்பவ பின்னணியில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டுள்ளனர் : ரவூப் ஹக்கீம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் காத்தான்குடி பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பங்களினால் காயமடைந்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சேதமடைந்த இடங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடிக்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

காத்தான்குடியில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது பிரோகிக்கப்பட்ட காடத்தனத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.

இந்த கலவரத்தில் காத்தான்குடி பொலிஸார் பக்க சார்பாக நடந்துள்ளனர்.இதனை பொலிஸ் மா அதிபருக்கும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் கூறியுள்ளேன்.

பக்க சார்பின்றி பொலிஸார் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட  வேண்டும். அதனை செய்ய காத்தான்குடி பொலிஸார் தவறியுள்ளனர் என்றார்.

மேலும்,நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கும் நல்லாட்சிக்கு குந்தகம் விளைவித்தவர்களுக்கும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்படுவது அந்தந்த கட்சிகளை பொறுத்தது.

இவ்வாறு நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கும் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவது நல்லாட்சியில் கவலைக்குரிய விடயமாகும்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .