2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

தொடர்ந்தும் கைகோர்த்து செயற்படுவோம் : அஸ்வான் சக்காப் மௌலானா

Administrator   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம். ஹனீபா,பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

இன, மத பேதமின்றி இந்த நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கு மிகவும் பொருத்தமானவர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பதை காலம் கடந்தாவது நாட்டு மக்கள் உணரந்திப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என்று ஐ.தே.க. கல்முனை தொகுதி பிரசார செயலாளரும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்ற ஒன்றுகூடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மஹிந்த ராஜபக் ஷ அணியினரின் கடுமையான இனவாத பிரசாரங்களுக்கு மத்தியிலும் நாட்டில் நல்லாட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அணி திரண்டு வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று ஐ.தே.கட்சியை மாபெரும் சக்தியாக மாற்றி, இந்த நாட்டில் சிறந்ததொரு ஆட்சியை ஸ்தாபிப்பதற்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்றார்.

மேலும்,நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் தொடர்ந்தும் கைகோர்த்து செயற்படுவோம்.

எதிர்காலத்தில் இன, மத பேதமற்ற ஓர் அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் பிரதமரின் கொள்கைத் திட்டம் வெற்றி பெற நாமும் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .