2021 மார்ச் 08, திங்கட்கிழமை

22வது ஆண்டு ஸ்தாபன தினம்

Super User   / 2014 மார்ச் 24 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ந.குகதர்சன்


மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காயான்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 22வது ஆண்டு ஸ்தாபன தினக் கொண்டாட்டம் பாடசாலை பிரதான மண்டபத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் தி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எஸ்.ஸ்ரீநேசன், திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹரிகரன், கோட்டக் கல்வி அதிகாரி சு.முருகேசுப்பிள்ளை, முகாமைத்து பிரதிக் கல்விப் பணிப்பாளர், முன்னாள் அதிபர்கள், மூத்த பிரஜைகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது. இங்கு பாடசாலை மாணவர்களினால் வரவேற்பு நடனம், ஆங்கில குழுப்பாடல், கிராமிய நடனம் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.

இங்கு பாடசாலையினரால் பாடசாலை ஆரம்பிக்க வழிகோரி இடத்தை அன்பளிப்புச் செய்த பரமானந்தம் தம்பதிகளின் புதல்வர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், கிராமத்தின் மூத்த பிரஜைகள் அனைவரும் அதிதிகளால் மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .