2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஷுஹதாக்கள் நினைவு தினத்தையொட்டி உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


23 ஆவது ஷுஹதாக்கள் நினைவு தினத்தையொட்டி ஷுஹதாக்களின் குடும்பங்களுக்கு நேற்று சனிக்கிழமை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஹிறா பவுண்டேனசன் நிறுவனத்தின் உதவியுடன் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆபள்ளிவாயல் நிருவாகத்தினால் இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட 103 குடும்பங்களுக்கும் அரிசி மற்றும் பால்மா பக்கட் உட்பட உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை, படுகொலைகள் இடம்பெற்ற முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் மஞ்சந்தொடுவாய் ஹூ-ஷைனியா பள்ளிவாயல் என்பவற்றில் விஷேட சமய நிகழ்வுகளும் பிரார்த்தனைகளும் நேற்று  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி பள்ளிவாயல்களில் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி நடாத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 103 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 256 பேர் படுகாயமடைந்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--