2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

25ஆயிரம் விதவைகளுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்தப்படும் - பிரதியமைச்சர் முரளிதரன்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சக்திவேல்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆயிரம் விதவைகள் உள்ளனர். அவர்களுக்காக வேண்டி பல தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தவுள்ளோம். வீட்டுத்தோட்டம், பண்ணை வளர்ப்பு, விவசாயம் போன்றன அவற்றில்அடங்குகின்றன என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வெல்லாவெளியில் 7.5 மில்லியன் ரூபா வெல்லாவில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று முந்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பழுகாமம், மண்டூர், நவகிரிப்பிரிவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.கிருபைராசாவின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் மட்டக்களப்பு உதவிக் கூட்டுறவு ஆணையாளர் எஸ்.கிருபைராசா, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்பாளர் பொ.இரவீந்திரன், போரதீவுப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் சிறிதரன், போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி விமலேஸ்வரன், வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய அதிபர் விவேகானந்தம் உட்பட கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், "இந்தப் பிரதேசத்திற்கு அண்மையில் 6 கிணறுகளை நிர்மாணித்தோம். மேலும் இங்கு விவசாய அபிவிருத்தி, தண்ணீர்ப் பிரச்சினை என்பன உள்ளன. அதனையும் தீர்ப்பதற்று படிப்படிகாக முயற்சிப்போம்.

திகிலிவட்டை பாடசாலை மாணவ அணியினர் விளையாட்டுப்போட்டியில் தேசிய மட்டத்தில் நான்காம் இடம் பிடித்துள்ளனர். அதுபோல் கிரான் பாடசாலை மாணவர்களும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். அதுபோல் இப்பகுதி மாணவர்கள் கல்வியிலும் அபிவிருத்தி காணவேண்டும்" என்றார்.

இதில் கலந்துகொண்ட மட்டக்களப்பு உதவிக் கூட்டுறவு ஆணையாளர் எஸ்.கிருபைராசா, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்பாளர் பொ.இரவீந்திரன், போரதீவப்பற்றுப்பிரதேச சபைத்தவிசாளர் சிறிதரன் போரதீவுப்பற்றுகோட்டக்கல்வி அதிகாரி விமலேஸ்வரன், வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய அதிபர்விவேகானந்தம்ஆகியோரும் உரையாற்றினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--