2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மட்டக்களப்பில சட்டவிரோத மின் பாவனையில் ஈடுபட்ட 26பேர் கைது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோத மின் பாவனையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து வந்த இலங்கை மின்சார சபையின் விசேட குழுவினர் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் கிரான், புணானை, ரிதிதென்ன, வாழைச்சேனை, பிறைந்தரைச்சேனை போன்ற பிரதேசங்களில் நடத்திய தேடுதலின் போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு தண்ணடப்பணம் செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--