Kogilavani / 2011 ஜூலை 17 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 ஏக்கர் பரப்பளவில் 20 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாக மாவட்ட தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நீர் உயிரியியலாளர் எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.
காவத்தமுனை, மீராவோடை, திருப்பெருந்துறை, முதலைக்குடா, நாவற்காடு ஆகிய இடங்களில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
கடந்த வருடம் இம்மாவட்டத்தில் 94 ஏக்கரில் 32 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டு அறுவடை செய்யப்பட்டதாக அவர்மேலும் தெரிவித்தார்.
தற்போது விடப்பட்டிருக்கும் இறால் குஞ்சுகளின் அறுவடை எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் நடைபெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.
7 minute ago
11 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
21 minute ago