2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

படுவான்கரையில் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதம் - அரியநேத்திரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 18 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக படுவான்கரை பிரதேசம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், சுமார் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.
 
முற்றாக சேதமான வீடுகளில் அதிகமான வீடுகள் களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகளென்பதுடன்,  வெள்ளம் வடிந்த பின்னரும் பல இடங்களில் வீடுகள் இடிந்துவிழுவதாகவும் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
பண்டாரியன்வெளியில் 103 குடும்பங்களும் மகிழவட்டவானில் 42 குடும்பங்களும் இவ்வாறு உள்ளதாகவும் ஏனை பகுதிகளிலும் மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--