Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 30 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
வாழைச்சேனை காகித ஆலைக்கு மாதாந்தம் 40 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுவருவதாக காகித ஆலையின் ஒனிறிணைந்த தொழிற்சங்கம் அரச உடமைகள் மற்றும் வர்த்தக முயற்சி அமைச்சர் தயாசிறி டி திசேராவிற்கு அனுப்பியுள்ள மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம், இலங்கை அரச கூட்டுத்தாபன பொது ஊழியர் சங்கம், வர்த்தக பொதுச்சேவை ஊழியர் சங்கம், ஜாதிக சேவா சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்தே இம் மகஜரை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளன.
கடந்த 1997ஆம் ஆண்டு முதல், 61504 மில்லியன் ரூபாய் இத் தொழிற்சாலை மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலைக்கு 2011.02.01 வரையான காலப்பகுதிவரை 15934.25 மில்லியன் கடன் ஏற்பட்டுள்ளது.
எமது ஆலையின் உடமைகள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை விற்பனை செய்யப்பட்ட உலோகப்பொருட்களின் பெறுமதி சுமார் 102 இலட்சம் ரூபாவாகும். ஆலையின் 200 ஏக்கர் காணியில் நெடுங்காலமாக வளர்க்கப்பட்டு வந்த மரங்கள் வெட்டப்பட்டு 2400 கன அடி விற்பனை செய்யப்பட்டடு 6 இலட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆலையின் நிர்வாகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுத்து ஆலையை கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்வேண்டும் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago