2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஈரளக்குளம் கிராமத்திலுள்ள மக்களுக்கு 45 வீடுகள்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈரளக்குளம் கிராமத்திலுள்ள மக்களுக்கு 45 வீடுகளை எஹட் நிறுவனத்தினால் நிர்மானிப்பதற்கான அடிக்கல் கடந்த வியாழக்கிழமையன்று நாட்டப்பட்டது.

செங்கலடி பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஸ், எஹட் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை கலாநிதி சிறிதரன் சில்வஸ்ட்டர் ஆகியோர் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

யுத்தத்தினால் 2007ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட இக்கிராமத்தில் அமைக்கப்படவுள்ள இதன் ஒவ்வொரு வீடும் நான்கு லட்சத்து ஜம்பதாயிரும் ரூபா பெறுமதி கொண்டதென எஹட் நிறுவனப் பணிப்பாளர் அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X