2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

5 எம்.பி.க்களின் 25 மில்லியன் நிதியில் 14 செயலகப்பிவுகளில் அபிவிருத்தி பணிகள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டதிலிருந்து இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் 25 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

தமிம் தேசிய கூட்டடைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பஸீர் சேகுதாவுத் ஆகியோரின் தலா 50 இலட்சம் ரூபாய் வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளிலிருந்தே இவ்வபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிதியொதுக்கீடுகளினூடாக மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், கால்நடை, விளையாட்டு, சமுகசேவை, சுயதொழில், வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .