2021 மே 06, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் சேதமடைந்த 5090 வீடுகளை நிர்மாணிப்பதற்கான தலா ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், ரி.லோகித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தின் போது முற்றாகச் சேதமடைந்த வீடுகளில் முதற்கட்டமாக 5090 வீடுகளைக் நிர்மாணிப்பதற்காக அரசினால் தலா ஒரு லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில்  முற்றாக சேதமடைந்த வீடுகளில்   627 வீடுகளைக் கட்டுவதற்கு இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி 627 வீடுகளின் உரிமையாளர்களுக்கு கொடுப்பனவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வவுணதீவுப் பிரதேச செயலாளர் என்.வில்வரத்தினம் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கலந்துகொண்டு சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .