2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 1,000 ரூபா கொடுப்பனவு வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் சமூக சேவைகள் திணைக்களத்தால் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  ஆயிரம் ரூபா கொடுப்பனவு நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் 206ஏ மற்றும் 206சி ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் 91 முதியவர்களுக்கு  ஆயிரம் ரூபா வைப்பிலிட்ட வங்கி வைப்புப் புத்தகம் கையளிக்கப்பட்டன.

பிறைந்துரைச்சேனை கிராம சேவை உத்தியோகத்தர் எச்.எம்.அமானுல்லாஹ் தலைமையில் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் ஜே.அல்பத்தாஹ் ஆகியோர் கலந்து கொண்டு இவர்களுக்கான வங்கி வைப்புப் புத்தகங்களை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .