2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் 8 மணிநேர மின்வெட்டு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 16 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் 15 இடங்களில் இன்று செவ்வாய்க்கிழமை எட்டு மணி நேர மின்வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின் பொறியியலாளர் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, அரசடித்தீவு, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, முனைக்காடு, மகிழுர், மனல்பிட்டி, தாழங்குடா, பாலமுனை, ஆகிய இடங்களிலேயே இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதனால் இம்மின்வெட்டு இடம்பெறுமென மின் பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--