2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் 89 இடங்களில் தபால்மூல வாக்களிப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 89 இடங்களில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 திணைக்களங்களிலும் 54 இராணுவ முகாம், பொலிஸ் நிலையம், விமானப்படை முகாம் ஆகியவற்றில் வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சிமன்றங்கள், சுகாதார அலுவலகங்கள் உட்பட திணைக்களங்களிலும் தபால் மூலமான வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--