2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

"பன்சலயில் தானம் செய்வதை விட, யுத்த பாதிப்பு மக்களுடன் வாழ்வது சிறந்தது"

Super User   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

நான் ஒரு பௌத்தனாகயிருந்து பன்சலைக்குச் சென்று தானம் செய்வதை விட யுத்தத்தால் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே இழந்த உன்னிச்சைப் பகுதி மக்களுடன் வாழ்வதையே பெரிதும் விரும்புகின்றேன் என உன்னிச்சை விஷேட அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி எஸ்.ரட்ணமல தெரிவித்தார்.

நேற்று உன்னிச்சையில் நடைபெற்ற வைபவமொன்றில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து இக்கிராமத்திற்கு நான் வந்த போது ஒரு மலசலகூடம் கூட இங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் பணம் சேகரித்துத்தான் மலசலகூடமொன்றை அமைத்து இந்த மக்களுக்கு கொடுத்தோம். பின்னர் 20 மலசல கூடங்களை இங்கு அமைத்தோம்.

பல்வேறு அவலங்கலைச் சுமந்து வாழும் இம்மக்களுடன் வாழவே நான் விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--