2020 பெப்ரவரி 17, திங்கட்கிழமை

ஆசிரியர்களது இடமாற்றத்தால் கல்வி பாதிக்கப்படுவதாக கவனயீர்ப்புப் போராட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டக்கல்விப் பிரிவுக்குள் அடங்கும் காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில், மாணவர்கள் இன்று (18) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கையில், “ஏற்கெனவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் இந்தப் பாடசாலையில் சுமார் 460 மாணவர்கள் கற்கும் நிலையில்,  பாடசாலையிலிருந்து ஏற்கெனவே 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆசிரியர் பதிலீடின்றி இடமாற்றம் செய்யப்பட்டார்.

“அதன் பின்னர் கடந்த வாரம் மேலும் ஒரு ஆசிரியர் பதிலீடின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

“இதனால் இந்தக் கல்வியாண்டின் இறுதித் தவணை நெருங்கும் இத்தறுவாயில் சுமார் 115 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதைக் கண்டித்தே, இந்த கவனயீர்ப்புப் போராட்டம் பெற்றோரால் நடத்தப்பட்டது” என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .