2020 ஜூன் 06, சனிக்கிழமை

இ.போ.ச. ஊழியர்களது வேலைநிறுத்தம் தொடர்ந்தது

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், எம்.எம்.அஹமட் அனாம், எம்.எஸ்.எம்.நூர்தீன், தீஷான் அஹமட்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (17) தொடர்ந்தது.

இதனடிப்படையில், அம்பாறை - அக்கரைப்பற்று போக்குவரத்துச் சாலை ஊழியர்கள், மட்டக்களப்பு - காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள், திருகோணமலை - மூதூர் சாலை ஊழியர்கள், இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதனால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன்,  மாணவர்களும் அரச உத்தியோகத்தர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X