2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னரான நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிலையத்தின் அதிகாரிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்று, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அலுவலக மண்டபத்தில், இன்று (17) நடைபெற்றது.

ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னரான பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் காத்தான்குடி பிரதேசத்தின் நிலவரங்கள் தொடர்பிலும் ஆய்வுவொன்றை மேற்கொள்ளும் நோக்கத்துடன், தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிலையத்தின் ஆய்வாளர் கசுனி ரணசிங்க உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர் இதன்போது காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் முஸ்லிம்களின் கலாசாரம், சமய விழுமியங்கள், திருமணச் சட்டங்கள் உள்ளிட்ட நடைமுறை விடயங்கள் தொடர்பாக, தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிலையத்தின் அதிகாரி கசுனி ரணசிங்க கேட்டறிந்தார்.

ஆய்வுக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட சந்தேகங்களுக்கு சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் விளக்கங்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .