2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் மேலதிக நேரக்கொடுப்பனவு வழங்கல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார உதவியாளர்களும் இன்று (17) கவனயீர்ப்புப் போராட்டதில் ஈடுபட்டனர்.

இக்கவனயீர்ப்புப் போராட்டம், வைத்தியசாலை முன்றலில் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைளை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்தி நின்றனர்.

சீருடைக்கென தற்போது வழங்கப்படுகின்ற 9, 600 ரூபாயை 15,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும், மேலதிக நேர வேலைக்காக கொடுப்பனவு வழங்கப்படவேண்டும், 180 நாட்கள் பணியாற்றியுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், இடர்கால கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும், வாரத்தில் 7 நாட்கள் பணியாற்றுகின்ற போதிலும் 5 நாட்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்கும் நிலை தவிர்க்கப்படவேண்டும் போன்ற 10 கோரிக்கைகள் சுகாதாரத் துறை ஊழியர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்தி - வைத்தியசாலை சிற்றூழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X