2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

காணிகளை மீட்க அமைப்பு உருவாக்கம்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி

யுத்த காலத்தில், கிழக்கு மாகாணத்தில் பறிகொடுத்த வாழ்விடங்கள், காணிகள்  என்பனவற்றை மீட்டெடுக்கும் கிழக்கு மாகாணத்துக்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக, தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் பயிற்சி இணைப்பாளர் பிரான்ஸிஸ் பிரியங்கர கொஸ்ரா தெரிவித்தார்.

சட்டம், சமூக நம்பிக்கை நிதியத்தின் சார்பாக,  காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணிகளை மீட்டெடுக்கும் கிழக்கு மாகாண அமைப்பை உருவாக்குவதற்கான அங்குரார்ப்பணக் கூட்டம், மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில், நேற்று (15) நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து பறிபோயுள்ள காணிகள் பற்றி அறிக்கையிடல், ஆவணப்படுத்தல் விடயமாக இங்கு தெளிவுபடுத்தப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .