Editorial / 2020 ஏப்ரல் 22 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொரனா உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட 32 பேர், நேற்று முன்தினம் (20) கொண்டு வரப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, கொரோனா சிகிச்சை நிலையமாக சுகாதார சேவைகள் திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் மாலை கொரோனா உறுதிப்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் 26 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு மேலும் 6 பேரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு தனிப்படுத்தல் முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை மாலை கொண்டுவரப்பட்டவர்களில் 15 பெண்கள் 8 ஆண்கள் 3 சிறுவர்கள் அடங்குவதாவும் இவர்களில் இருவருக்கு இன்னும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் தெரியவருகின்றது.
இவர்கள், கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
இராணுவம், விசேட அதிரடிப்படை, பொலிஸார் ஆகியோரின் பலத்த பாதுகாப்புடன் இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025