வா.கிருஸ்ணா / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோட்டாபயவை ஆதரிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறினால்கூட, அதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கம்பிரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (14) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கோட்டாபயவுக்கு ஆரதவளிக்குமாறு வரதராஜப்பெருமாள், டக்ளஸ் தேவானந்நதா, கருணா போன்றோர் சொல்லித் திரிகின்றனர் எனவும் அவருக்கு ஆதரவளிப்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோட்டா எங்களுக்கு என்ன தீர்வைத் தரப்போகின்றார், கடந்த காலத்தில் அவர் என்ன செய்தார் எனக் கேள்வியெழுப்பிய சிறிநேசன் எம்.பி, அவருக்கு நாங்கள் ஆதரவளிக்கலாம் எனச் சொன்னால் அதில் வடிகட்டிய சுயநலவாதத்தையும் முட்டாள்தனத்தையும் தவிர வேறெதுவும் இருக்க முடியாதென்றார்.
ஆனால், குறிப்பிட்ட ஒரு நபரை ஆதரிக்கவேண்டுமென மக்கள் கூறத் தொடங்கினால் மக்களுக்கு மாறாகத் தாம் முடிவெடுக்கமுடியாதெனவும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத முடிவுகள் ஏற்படுகின்றபோது அந்த முடிவுகளுக்குத் தாம் செல்லவேண்டிய நிலைமையேற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
42 minute ago
7 hours ago
9 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
7 hours ago
9 hours ago
28 Dec 2025