வா.கிருஸ்ணா / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையமானது, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவசர அவசரமாக அண்மையில் திறக்கப்பட்டாலும் அதை இன்னும் மாநகர சபை கையேற்கவில்லையெனவும் வேலைகள் முழுமைபெறாமல், அதைப் பொறுப்பேற்கமாட்டோம் எனவும், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
குறித்த தனியார் பஸ் நிலையத்தின் தற்போதைய நிலை தொடர்பில் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பில் தெளிவைப் பெறும் பொருட்டு, ஊடகவியலாளர்களால் இன்று(15) எழுப்பப்பட்ட கேள்வியின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்ப் பிரதேசங்களுக்குக் கிடைக்கப் பெறுகின்ற அரச வளங்கள் எமது பிரதேசத்தை விட்டுச் செல்லக் கூடாது என்ற குறிக்கோலுடன், குறித்த பஸ் நிலையத்தின் நிர்மாணப் பணிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டன என, மேயர் தெரிவித்தார்.
எனினும், இது முற்றுமுழுதாகப் பூரணப்படுத்தப்படாமை குறித்து பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சருக்கும், சம்மந்தப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் தெளிவுறுத்தியதோடு, பூரணப்படுத்தப்படுத்தாத குறித்த கட்டத்தை தாம் ஒருபோதும் கையேற்ற மாட்டோம் என்ற கண்டிப்பான அறிவித்தலையும் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கிகரிக்கப்பட்ட வரைபடம், அதற்கான செலவு மதிப்பீடு என்பவற்றுக்கு ஏற்ப அனைத்து வேலைகளும் நிறைவுசெய்யப்பட்டால் மாத்திரமே நாம் பொறுப்பேற்போம் எனவும் மேயர் தெரிவித்தார்.
இதேவேளை, வெபர் விளையாட்டு அரங்கும் வேலைகள் பூரணப்படுத்தப்படாத நிலையில், மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டிருந்ததன் காரணமாக இன்றும் குறித்த மைதானம் பல குறைபாடுகளுடனேயே காணப்படுகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago