2020 ஜூலை 15, புதன்கிழமை

தபால்மூல வாக்குச் சீட்டுகள் ஒப்படைப்பு

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், கனகராசா சரவணன், வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இவ்வாண்டுக்கான பொதுத் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், தபால்மூல வாக்களிப்பில் ஈடுபடுவதற்கான வாக்குச் சீட்டுகள் பொதி செய்யப்பட்டு, தபால்மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக, தபால் திணைக்களத்திடம் நேற்று (30) ஒப்படைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்காக, அரச அலுவலர்கள், பாதுகாப்புப் படையினரிடமிருந்து, 13,156 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 12,815 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தபால்மூல வாக்குச் சீட்டுகள் காப்புறுதி செய்யப்பட்டு, தபால்பொதி மூலம் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நடவடிக்கை, 23 நிலையங்களில் சுகாதார நடைமுறைகளுடன் கிரமமாக நடைபெற்றதுடன், வாக்குச் சீட்டுக்களை பொதி செய்யும் நடவடிக்கைக்காக மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த 19 நிலையங்களுடன் தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்படடிருந்த 4 நிலையங்களிலுமாக 211 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பொதுத் தேர்தல் 2020க்கான தபால் வாக்களிப்பு, இம்மாதம் 14, 15ஆம் திகதிகள் நடைபெறவுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X