2020 ஜூன் 01, திங்கட்கிழமை

’தமிழர்களின் நெஞ்சங்களில் பாய்ந்த தோட்டாவே கோட்டா’

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் நெஞ்சங்களில் பாய்ந்த தோட்டாவாகத்தான் கோட்டாவைப் பார்ப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், டக்ளஸ் தேவானந்தா எம்.பி ​போன்றவர்கள், சமூக நல நோக்கத்தைவிட, தங்களுடைய சுயநல அரசியல் நோக்கத்துக்காகவே, கோட்டாபய போன்றோரை ஆதரிக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய சிறிநேசன் எம்.பி, கடந்தகால ஆட்சியின் போது, எமது மக்கள் காணாமலாக்கப்பட்டமை,  முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் வகை தொகையின்றிப் படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள், தொடர்ந்தும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களாக இருக்கின்ற நிலையில், இந்தச் சம்பங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்‌ஷ இருக்கிறாரென்றார்.

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். கடந்த கால ஆட்சியின் போது கோட்டாபய, மகிந்த ராஜபக்‌ஷவோடு நண்பராக இருந்தார் என்ற அடிப்படையில் கூறுகின்றரே தவிர, அவர் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவில்லையென்றார்.

எனவே, டக்ளஸ் தேவானந்தா சமூக நல நோக்கத்தில் சொல்வதை விட, தங்களுடைய சுயநல அரசியல் நோக்கத்தில் கோத்தபாய ராஜபக்‌ஷவை ஆதரிக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இப்படியான நிலைப்பாட்டிலிருக்கும் டக்ளஸ், இன்றும் திருந்தாத ஒருவராக இருக்கின்றார் என்பதுதான் எங்களுடைய கணிப்பாக இருக்கின்றது. ஏனென்றால், மக்களின் விரோத செயற்பாடுகளைச் செய்தவர்களை ஆதரிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதொன்றாக இருப்பதாக, சிறிநேசன் எம்.பி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X