Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீவிரவாதத்துக்கும் இன, மதவாதத்துக்கும் தீனிபோட இந்த நாட்டில் எவரும் முனையக் கூடாது என்பதை, எதிர்கால சமுதாயத்துக்கு உறுதிப்படுத்த வேண்டுமென, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
இனவாதமும் மதவாதமுமின்றி இலங்கையில் இனி அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருப்பது, இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு என்றும் அவர் தெரிவித்தார்.
ஏறாவூரில் இன்று (22) ஊர்ப்பிரமுகர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் உரையாற்றிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஏறாவூரிலுள்ள அரசியல்வாதியும் இப்பிரதேச மக்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் இன, மத தீவரவாதத்துக்குத் துணைபோனவர்களல்ல என்றார்.
ஏறாவூர்ப் பிரதேச மக்கள், இனவாதத்தாலும் தீவிரவாதத்தாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 1985ஆம் ஆண்டிலிருந்து இப்பிரதேச மக்கள் படுகொலைகள், இடப்பெயர்வுகள், வாழ்விட வாழ்வாதார இழப்புகளைச் சந்தித்து வந்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இப்பிரதேச மக்கள் நிதானத்துடன் செயற்பட்டு, நாட்டின் ஐக்கியத்துக்காகவும் சட்டம் ஒழுங்கைநிலைநாட்டுவதற்காகவும் விசுவாசமாகச் செயற்படுகின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .