2020 மே 25, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் முதியவர் பலி

Editorial   / 2018 ஜூன் 10 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி 5இல், நேற்று முன்தினம்(08) நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவரை, இன்று (10) கைது செய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, 73 வயதான ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டோர் தப்பிச் சென்றிருந்த நிலையில், இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தீவிர விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்தே, கொக்கட்டிச்சோலை பகுதியில் தலைமறைவாகியிருந்த மூவரை, பொலிஸார் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்புடைய ​மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X