Editorial / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}



டி.எல்.ஜவ்பர்கான்
'மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சந்தை வழிகாட்டுதலுக்கான திறவு கோள்' எனும் தொனிப்பொருளில், 'மாவட்டச் செயலக மனிதவள மேம்பாட்டுத் திறன் அபிவிருத்தித் திணைக்களம், எஸ்கோ நிறுவனம் என்பன இணைந்து, தொழில் வழிகாட்டும் சந்தையை, மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள செல்வநாயகம் மண்டபத்தில், நேற்று (27) நடத்தின.
இந்தச் சந்தையை, மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிகச் செயலாளர் சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், எஸ்கோ நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி கோதை, தொழில்நுட்பக் கல்லூரி அதிபர்கள், தேசிய தொழிற் பயிற்சி கைத்தொழில் அதிகார சபை, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், தனியார் தொழில் வழங்குநர் தொழிலை பெற்றுக்கொள்ளும் இளைஞர், யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago