2024 மே 02, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 14 நாள்களில் 248 பேருக்கு டெங்கு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 ஜனவரி 24 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் இந்த ஆண்டு ஜனவரி 3ஆம்  திகதி தொடக்கம்  17ஆம் திகதி வரையும் 248 பேர் டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதென, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

இதற்கமைய, டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பில் இதுவரை 36 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஆரையம்பதியில் 51 பேர்;;, களுவாஞ்சிகுடி  20 பேர்;;,; வாழைச்சேனை 41 பேர்;;, செங்கலடி 29 பேர்; ;;, காத்தான்குடி 16 பேர்;;, ஏறாவூர் 16 பேர்;;,  வெல்லாவெளி 03 பேர்;;, வவுணதீவு 01 பேர் ;;,பட்டிப்பளை 05 பேர்;;, ஓட்டமாவடி 07 பேர் ;;, கோரளைப்பற்று மத்தி 17;;,; கிரான் 06 பேர் என மொத்தமாக  248 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  

இதில் குறிப்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .