2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மட்டு. - கல்முனை வீதியில் இரு பஸ்கள் விபத்து

Princiya Dixci   / 2021 ஜனவரி 18 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில், இன்று (18) காலை 7 மணியளவில் தனியார் பஸ்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரு பஸ்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அரச கட்டடமொன்றுக்கும் பலத்த  சேதம் ஏற்பட்டுளளது.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ், ஆரையம்பதி கமநல சேவைகள் திணைக்கள  அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு தனியார் பஸ்ஸின் பின் பக்கமாக மோதியுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

இதனால் இரு பஸ்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், கமநல சேவைகள் திணைக்கள அலுவலத்தின் மதில் மற்றும் பிரதான கதவுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

பின்னால் வேகமாக வந்த பஸ் வான் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே நிறுத்தியிருந்த பஸ்ஸின் மீது மோதியதால் அந்த பஸ் அலுவலகக் கட்டட மதிலில் மோதியுள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .