2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை, பெருவெட்டை வயல் பிரதேசத்தில், நேற்று (19) மாலை,  இடி, மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி, குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

மீராவோடையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அச்சு மொஹமட் ரம்ழான் (வயது 40) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வயலில் உழவு வேலையில் ஈடுபட்ட உழவு இயந்திர சாரதிக்கு, உணவு வழங்கச் சென்றபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .