2020 நவம்பர் 28, சனிக்கிழமை

ரயிலில் மோதுண்டு தந்தையும் இரு பிள்ளைகளும் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு – கொழும்பு விரைவு ரயிலின் மோதுண்டு, தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக, வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிலுள்ள போவத்த எனுமிடத்தில்,நேற்று (10) இரவு 9.30 மணியளவில்  இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், போவத்த கிராமத்தைச் சேர்ந்த கதிரவேல் விஜயசூரிய (வயது 37) மற்றும் அவரது பிள்ளைகளான, ரஞ்சித் சங்கரூபன் (வயது 12), விதர் சஞ்சித் (வயது 04) ஆகியோரே பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் இரவு நேர விரைவு ரயிலானது, வெலிக்கந்தை – போவத்த எனுமிடத்தை ஊடறுத்துச் செல்லும்போது,  மூவரும் குறித்த ரயிலில் மோதுண்டுள்ளனர்.

அவ்வேளையில் தந்தையும் அவரது 04 வயது பிள்ளையும், ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன்,  12 வயதான மூத்த மகன்,  குற்றுயிராகக் காணப்பட்ட நிலையில், ரயில் நிலைய அதிகாரிகளால் வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  ஏற்ககெனவே, பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த மூவரதும் சடலங்கள் உடற்கூறாய்வுக்காக வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனவென்றும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--