2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

வலயமட்ட ஆசிரியர் இடமாற்றத்துக்கு விண்ணப்பம் கோரல்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.சுதாகரன்

கிழக்கு  மாகாண கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையின் பிரகாரம் 2020ஆம் ஆண்டுக்கான வலயமட்ட வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்துக்கான விண்ணப்பம், பட்டிருப்பு கல்வி வலயத்தால் கோரப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரிகள், தங்களது விண்ணப்பங்களை இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன்பதாக அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி அலுவலகம், களுவாஞ்சிகுடி எனும் முகவரிக்கு, பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் கேட்டுள்ளார்.

வலய மட்ட நிபந்தனைகளாக, ஒரே பாடசாலையில் 08 வருடங்களுக்கு மேல் கடமை புரியும் ஆசிரியர் அனைவரும் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.

57 வயதுக்கு  மேற்பட்டவர்கள் 08 வருடங்களைப் பூர்த்தி செய்திருப்பின் அவர்கள் விரும்பும் பட்சத்தில் மாத்திரம் இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

முதல் நியமனப் பாடசாலையில் கட்டாய சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். விண்ணப்பத்துடன், தங்களது முதல் நியமனக் கடிதத்தின் பிரதி தற்போதைய பாடசாவையில் கடமைப் பொறுப்பேற்ற கடிதம், தேசிய அடையாள அட்டையின் பிரதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், விண்ணப்பங்கள் 02 பிரதிகளில் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளார்.

இதேவேளை, ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 8 வருடங்களுக்கு மேலாக கடமை புரிந்து கொண்டிருந்தும் வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காதவர்கள் தொடர்பாக வலயக்  இடமாற்ற சபையின் தீர்மானங்களுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X