Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், கனகராசா சரவணன்
கிழக்கு மாகாண புவிசரிதவியல் அளவீடு, சுரங்கங்கள் பணியகத்தால் வெடிபெருள்கள் பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேகுணவந்தன தலைமையில், மட்டக்களப்பில் நேற்று (17) நடைபெற்றது.
ஏப்ரல் மாதத் தாக்குதல்களுக்குப் பாவிக்கப்பட்ட சில வெடிமருந்துகள் தொடர்பில் இதன்பொது ஆராயப்பட்டதுடன், வர்த்தக நோக்கில் வெடிமருந்துகளை வழங்குவதில் புதிய சட்ட நடவடிக்கைகள் தெரிவுபடுத்தப்பட்டன.
அவ்வாறு வழங்கப்படும் வெடிபொருள்களுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரிகளின் அதிகாரங்கள், சட்டத் திருத்தங்களில் காணப்பட்டுள்ள விடயங்களும் இதில் ஆராயப்பட்டன.
புவிச்சரிவியல் அளவீடு, சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அசேல இடவெல, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார், திருகோணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார், அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க தயானந்த, திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.ஆர்.எஸ். நர்கர்போல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
16 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
1 hours ago