2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய் மரணம்

Editorial   / 2026 ஜனவரி 25 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்,  திருநெல்வேலி - கலாசாலை வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான 49 வயதுடையவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.   

அந்தத் தாய் கழிப்பறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராத காரணத்தால் அவரை தேடிச்சென்று மகன் பார்த்தவேளை மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X