2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

வேத்துச்சேனை கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது

Princiya Dixci   / 2021 ஜனவரி 12 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி    

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிராமங்களின் உள் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள வேத்துச்சேனைக் கிராமம் மழை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் கிராமத்துக்குள் முற்றாக புகுந்துள்ளதுடன், அக்கிராமத்திலுள்ள பொரும்பாலான வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. 

இதனால் தமது உடமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கிராமத்தில் தாம் மேற்கொண்டிருந்த மேட்டுநிலப் பயிற்செய்கை உள்ளிட்ட விவசாயச் செய்கைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும், வேத்துச்சேனைக் கிராம மக்கள் அங்கலாய்கின்றனர்.

வேத்துச்சேனைக் கிராமத்துக்குச் செல்லும் தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அம்மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் வேத்துச்சேனைக் கிராமத்திலுள்ள 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .