2020 ஜனவரி 29, புதன்கிழமை

ஹஜ், உம்றா முகவர்கள் சங்கத்தின் ஒன்றுகூடல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணத்திலுள்ள ஹஜ், உம்றா முகவர்கள் சங்கத்தின் ஒன்றுகூடல், அச்சங்கத்தின் தலைவர் மௌலவி எம்.ஐ.ஹுஸைனுத்தீன் றியாழி தலைமையில், காத்தான்குடியில் இன்று (15) நடைபெற்றது.

இதில் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.எப்.ஆர்.முகத்தஸி, பொருளாளர் எஸ்.எம்.எம்.சமீம், கிழக்கு மாகாண ஹஜ், உம்றா முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கிழக்கு மாகாணத்திலுள்ள ஹஜ், உம்றா முகவர்கள், ஹாஜிகளிடத்தில் ஒரே விதமான கட்டணத்தை அறவிடுவது தொடர்பாகவும் ஹாஜிகளின் நலன்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .